இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றின் மூன்றாம் அலை தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, அதிகப்படியான மக்கள்கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மக்கள் அனைவரும் பண்டிகை நாள்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தங்களது வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும். இந்த அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் கல்வி நலன் பேணும் வகையில், 9 முதல் 12ஆம் வகுப்புகளும், கல்லூரகளும் சுழற்சி முறையில் உரிய வழிகாட்டுநெறிமுறைகளுடன் நடைபெற்றுவருகிறது. சில மாவட்டப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படும் செய்திகளும் வருகின்றன.
எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்தடுப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, உள்ளாட்சித் துறை, மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் இங்கே