தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்குமென முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள்
தொற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 11 மாவட்டங்களில் வாடகை ஆட்டோக்கள், டாக்ஸிகள் உள்ளிட்டவை இ-பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
தொற்று குறைவாகவுள்ள மாவட்டங்கள்
தொற்று குறைவாகவுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'பல்முனை நடவடிக்கையால் படிப்படியாக குறையும் கரோனா' ராதாகிருஷ்ணன்!