சென்னை: 17 மாநகராட்சி, 110 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடத்தும் நடைமுறைக்கான விரிவான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவடைந்துள்ளது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 2022 ஜூன் 30ஆம் தேதிவரை ஆறு மாத காலத்திற்கு அல்லது
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தேர்தலுக்குப் பின்பு நடத்தப்படும் ஆண்டின் முதல் கூட்டம் வரை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்தம் முன்வடிவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிமுகம்செய்தார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க உதவிய கார் டயர்