தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள, அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கான சாதாரண தேர்தல் அறிவிக்கையின் போது, மாதிரி நடத்தை விதி ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்; மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளுக்குப்பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அறிவிக்கையின் போது, மாதிரி நடத்தை விதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்; மாநிலத்தில் உள்ள ஊரகப் பகுதிகளுக்குப் பொருந்தாது என்றும், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தல்கள் அறிவிக்கப்படும் போது, மாதிரி நடத்தை விதிகள் மாநிலம் முழுமைக்கும் பொருந்தும் எனவும் திருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரம்!
ஏற்கெனவே உள்ள விதிகளின் படி, மாநிலத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கோ அல்லது நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கோ சாதாரண தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், மாநிலம் முழுமையாக மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என இருந்தது குறிப்பிடத்தக்கது.