ETV Bharat / city

சட்டப்பேரவை தேர்தல் களம்! மண்டலங்களின் நிலை என்ன? - சீமான்

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழகத்தின் மண்டலங்கள் எந்த கட்சிக்கு சாதகமாக உள்ளன, கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு இம்முறையும் தொடருமா அல்லது களம் மாறியிருக்கிறதா என்பது குறித்த விரிவான ஓர் அலசல்.

admk
admk
author img

By

Published : Feb 9, 2021, 8:02 PM IST

Updated : Feb 9, 2021, 9:43 PM IST

சட்டப்பேரவை தேர்தல் களம் சித்திரை மாத அக்னி நட்சத்திர வெயில் போல தற்போதே தகிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த மக்களவை தேர்தல் வெற்றியை போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறுமா அல்லது தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியை அதிமுக தக்க வைக்குமா என்ற விவாதம், அரசியல் களத்திலும், வாக்காளர்கள் இடையேயும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது திமுக 52.39% ஓட்டுகளையும், அதிமுக 31.26% ஓட்டுகளையும் பெற்றன. அது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதோடு, மாநில பிரச்சனைகளுக்கு மத்திய அரசின் அணுகுமுறையை பொறுத்து அமையும் தேர்தல் என்பதால், வாக்குகள் மக்களவை தேர்தலில் ஒருவிதமாகவும், சட்டப்பேரவை தேர்தலுக்கு வேறு விதமாகவும் பதிவாகின்றன. அதாவது இரு தேர்தல்களையும் போட்டு மக்கள் குழப்பிக் கொள்வதில்லை.

ஜெயலலிதா மறைவையடுத்து முதலில் ஓபிஎஸ், பின்னர் இபிஎஸ், அதன்பின்னர் இபிஎஸ்-ஓபிஎஸ் என்று அதிகாரம் கைமாறிய பின்னர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் ஆயினர். இதையடுத்து அதிமுக கொறடா உத்தரவின் பேரில் பேரவைத் தலைவர் தனபால் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். அதோடு ஏற்கனவே காலியாக இருந்த 4 தொகுதிகளுக்கும் சேர்த்து, 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் மக்களவை தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்டது.

மக்கள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின்!
மக்கள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின்!

மினி சட்டப்பேரவை தேர்தல்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாகவே, 22 தொகுதி இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. 22 தொகுதிகளையும் கைப்பற்றினால் திமுக ஆட்சி, குறைந்தபட்சம் 4 தொகுதிகளை கைப்பற்றினாலே அதிமுக ஆட்சி என்ற சூழல் அப்போது நிலவியது. இதனால் தேர்தல் களம் படுசூடாக இருந்தது. இடைத்தேர்தல் முடிவில் திமுக 13 தொகுதிகளை வென்றதோடு, 9 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. அதில் திமுக 45.1% ஓட்டுகளையும், அதிமுக 38.2% ஓட்டுகளையும் பெற்றன.

2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்!

இதோ அருகில் வந்துவிட்டது சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021. இரண்டு பிரதான கட்சிகளுக்கு எதிராக மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருக்கின்றன. கூட்டணியை பொறுத்தளவில் திமுகவில் குழப்பமற்ற அதே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி இருந்து வருகிறது. ஆனால், அதிமுகவில் அப்படியான சூழல் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், நான்கு திசைகளுக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றி சுழன்று வருகின்றனர் முதலமைச்சர் பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்.

பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவிற்கு பின்னடைவா?

யாருக்கு கை கொடுக்கும் கொங்கு மண்டலம்?

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு, அதிமுக கோட்டையாக இருப்பது கொங்கு மண்டலம் என்று சொல்லக்கூடிய மேற்கு மாவட்டங்கள். ஆனால், மக்களவை தேர்தலில் அக்கோட்டையை தகர்த்தெறிந்தது திமுக. அக்கூட்டணி சார்பில் கோவையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 13.3% ஓட்டுகள் அதிகம் பெற்று அதிமுக கூட்டணி வைத்த பாஜகவை வீழ்த்தியது.

ஈரோடு தொகுதியில் 12% வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வென்றார், திமுகவுடன் கூட்டணி வைத்து உதயசூரியனில் நின்ற மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி. கரூரில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, அதிமுகவின் மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரையை 38% வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வியடைய செய்தார். இதே போல, திருப்பூர், சேலம், நாமக்கல், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளையும் திமுக கூட்டணியே வென்றது. தனது கோட்டை என மார் தட்டிய அதிமுக, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.

ஆனால், வரப்போகும் தேர்தலில் கொங்கு மண்டலத்தை மீண்டும் கைப்பற்ற அதிமுகவும், இருக்கும் இடத்தை பலப்படுத்திக்கொள்ள திமுகவும் கடும் முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது முதல் பேரவை தேர்தல் பிரச்சாரத்தை கொங்கு மண்டலத்திலேயே தொடங்கியிருக்கிறார். கொங்கு மண்டல வாக்குகளை பெறுவதுதான், ஆட்சியை உறுதி செய்வதற்கான முக்கியத்துவமாகவும் அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி!

தேர்தலுக்கு தயாராகிவிட்டதா தென் மண்டலம்?

கட்சிகள் பொதுவாகவே தங்களது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் தலைநகரான மதுரையில் இருந்து தொடங்குவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கின்றன. அந்தளவிற்கு தென் மண்டலம் அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்றளவும் இருக்கிறது. இதுவும் பொதுவாகவே அதிமுகவிற்கு கோட்டையாக ஆரம்ப காலங்களில் இருந்து வந்தாலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி மட்டுமே அதிமுகவுக்கு கை கொடுத்தது. ஓபிஎஸ்-ன் மகனான ரவீந்திரநாத் குமார், 6.64% அதிக ஓட்டுகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடித்தார்.

ஆனால், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி தொகுதிகள் அனைத்திலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. நட்சத்திரத் தொகுதியான தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, 35% வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றார். அதேபோல் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரியில் 24% வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வென்றார்.

திமுக அதிமுகவுடன் மோத கமலும், சீமானும் தயாரா?

அமமுக பிளவு, பாஜகவுடன் கூட்டணி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற காரணங்கள், இன்னும் இம்மண்டலத்தில் வலுவான எதிர் காரணங்களாகவே அதிமுகவிற்கு இருக்கின்றன. ஒருவேளை அணிகள் இணைந்தால் தென் மாவட்டங்களில் வரும் தேர்தலில் அதிமுகவால் குறிப்பிட்ட சில இடங்களை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா யார் பக்கம்?

கடந்த இடைத்தேர்தலிலும் சரி, மக்களவை தேர்தலிலும் சரி, திமுக அமோக வெற்றியை பதிவு செய்தது டெல்டா மாவட்டங்களில்தான். திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி 15-20% வித்தியாசத்தில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவிற்கு சாதகமாகவே டெல்டா மற்றும் அதனை சுற்றியுள்ள உள் மாவட்டங்களின் கள நிலவரம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாவட்டங்கள் யாருக்கு?

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின் போது, பாமகவை அதிமுக தன் பக்கம் இழுத்த யுக்தி, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு சாதகமானது. வரும் தேர்தலிலும் பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்ய பலகட்ட பேச்சுவார்த்தைகளை அதிமுக நடத்தி வருகிறது. என்ன விலை கொடுத்தேனும் பாமகவை கூட்டணியில் தக்க வைக்க அமைச்சர்கள் நடையாய் நடந்து வருகின்றனர். ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி அதிமுகவிடம் முரண்டு பிடித்து வருகிறார் ராமதாஸ். இம்முறையும் பாமகவுடன் சேர்ந்து வட மாவட்டங்களில் நின்றால் அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட முடியும் என அதிமுக கருதுகிறது. திமுகவோ நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, பாமகவின் சரிந்த செல்வாக்கு இவற்றை வைத்து இத்தேர்தலில் மிகப்பெரிய நம்பிக்கையுடன் வட மாவட்டங்களை பார்க்கிறது.

அதிமுகவுடன் முரண்டு பிடிக்கும் பாமகவின் ராமதாஸ்!

சென்னை மண்டலம் என்ன சொல்கிறது?

திமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சென்னையில், மொத்தமுள்ள 16 இல் 13 தொகுதிகளை கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அக்கட்சி வென்றது. அதே போல் 3 மக்களவை தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். வரக்கூடிய தேர்தலிலும் ஒன்றிரண்டு தொகுதிகளை தவிர மற்ற அனைத்தும் திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இது குறித்து பேசிய மூத்தப் பத்திரிகையாளர் வெங்கட்ராமன், ”பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது சந்தேகம்தான். அதேபோல், தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவுவதாலும் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. சசிகலா அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டு வர முயல்வாரே தவிர, ஆட்சி அமைப்பது அவரது எண்ணமல்ல. அதேவேளை ஏப்ரல் மாத நிலவரத்தை முன்கூட்டியே கணிப்பதும் கடினம். தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் மாறக்கூடியது” என்றார்.

பெரும் நம்பிக்கையில் திமுக!
பெரும் நம்பிக்கையில் திமுக!

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல், திமுக அதிமுக சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால், மக்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆளுமையான தலைவர், ஆட்சி அதிகாரத்திற்கு வரப்போகும் கட்சி எது என்பதை இத்தேர்தல் சொல்லிவிடும். ஒவ்வொருவரின் முடிவையும் ஒவ்வொருவரும் அறிய, இன்னும் இருக்கின்றன மூன்று மாதங்கள். காத்திருப்போம்.

இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் நினைக்கின்றனர்! - கனிமொழி

Last Updated : Feb 9, 2021, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.