ETV Bharat / city

அதிகாரிகளின் அலட்சியமே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் - உயர் நீதிமன்றம் - Lazy officers the main reasons of water bodies encroachment

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 16, 2022, 6:18 AM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், வட பெரும்பாக்கத்தில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு சாயிரா பேகம் என்பவர் அளித்த விண்ணப்பத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே அந்த நிலத்தை அண்ணாமலை என்பவர் வாங்கியுள்ளார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலை தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, இயற்கை கொடையாக அளித்த பல நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், வேலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கிடைப்பதாக கூறிய தலைமை நீதிபதி, ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உள்ள அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என தெரிவித்தார்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக சாடிய தலைமை நீதிபதி, அவர்கள் எதற்காக ஊதியம் பெறுகின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல், மற்றொரு வழக்கில் அதிகாரிகள் தங்கள் பணியை செய்வதில் குறைபாடு இருந்தால் அதற்கு காரணம் அரசுதான் என்றும், ஊழலில் சிக்காமலும் சில அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியையும் செய்வதில்லை என்றும் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதும் இந்த நிலை நிலவுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் 45 ஆயிரம் பணியிடங்கள்: தமிழ்நாடு இளைஞர்கள் சேர்வது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.