ரயிலில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்தியில் தகவல்கள் வருவதாக புகார் எழுந்த நிலையில், ரயில்வே துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையே, ரயில்வே துறைக்கு பயணிகள் நலச் சங்கம் புகார் அளித்தது.
ரயில் முன்பதிவு குறித்த விவரங்களை ஆங்கிலம், உள்ளூர் மொழிகளில் வெளியிட வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்தார்.
இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்ததால் பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் வரும் என்று தெரிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை எனவும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்யுங்கள் என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.