இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில், 133 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 ஏரிகள் 75% கொள்ளளவையும், 269 ஏரிகள் 50% கொள்ளளவையும் எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொதுப்பணித்துறை, 25% கொள்ளளவை 241 ஏரிகளும், 25 விழுக்காட்டிற்கும் குறைவான கொள்ளளவை 40 ஏரிகளும் எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு ஆர்ப்பணிக்கும் உள்துறை அமைச்சர்!