இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே சீபா (( Comprehensive economic partnership agreement)) என்னும் ஒப்பந்தமும், இந்தியா ஆஸ்திரேலியா இடையே E.C.T.A (( economic cooperation and trade agreement)) என்னும் ஒப்பந்தமும் அண்மையில் போடப்பபட்டது.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு விளக்கும் விதமாக கிண்டி ஐடிசி சோழாவில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநில குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், "நாட்டின் கடல்சார் பொருள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. 20 ஆயிரம் கோடி நிதியை 'பிரதமர் நிதியுதவி திட்டத்தின்' மூலம் இத்துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறையில் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவு இறால் ஏற்றுமதி இந்தியாவில்தான் நடக்கிறது. உள்நாட்டு ஏரி, குளம் மூலம் உற்பத்தியை அதிகரிக்க 'ஆத்ம நிர்மான் பாரத்' மூலம் 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடல்சார் பொருள் ஏற்றுமதியில் 59 ஆயிரம் கோடி இலக்கை 2021-22 நிதி ஆண்டில் எட்டப்பட்டுள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா இடங்களை திமுகவிடம் கேட்போம்-சொல்கிறார் கே.எஸ்.அழகிரி