சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே மேலப்பேடு கிராமத்தில் உள்ளது பூங்குளம். இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவர், அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி கோவிந்தன் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, கோவிந்தன் மது போதையில் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு