ETV Bharat / city

'மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்' - கே.எஸ் அழகிரி - சோனிய காந்தி பேட்மிண்ட்ன் விளையாட்டு போட்டி

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் நூறு சதவீதம் காங்கிரஸ் கட்சி துணை நிற்குமென அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி
author img

By

Published : Mar 10, 2022, 8:10 AM IST

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக 'சோனியா காந்தி பேட்மிண்ட்ன் விளையாட்டு போட்டி' நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என 9 பேருக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி விருதுகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தேர்தலில் போட்டியிட அப்போதைய தலைவர் ஜி.கே.மூப்பனார் தனக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்தார். ஆனால், 4-வது முறை வாய்ப்பு வழங்கவில்லை. அதனை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன்.

நம் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு நோக்கம் வேண்டும், அது நேர்மறையாக இருக்க வேண்டும். அப்படி உள்ளவர்களுக்கு பூமி ஒரு சொர்க்கம். எனது வாசிப்பு, அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் சொர்க்கம் என்பது பூமி மட்டுமே.

தீதும், நன்றும் பிறர்தர வாரா என்பது போல் தான் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு என்றார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சி அல்ல; அவர்கள் அடுத்த மன நிலைக்கு சென்று விட்டார்கள். ஆகையால் வாழ்க்கையில் உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்' என பேசினார்.

மேகதாது அணையை எதிர்ப்போம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, 'தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது. இதில் முதல் தவறு செய்தது பாஜகவின் நீர்வளத்துறை தான். அப்போது தமிழ்நாட்டில் அதிமுக இருந்தபோது, கடுமையாக எதிர்க்கவில்லை; அங்கு அணை கட்டுவது இந்தியாவின் நலனுக்கு எதிரானது.

இதனை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பான, தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கு 100% துணை நிற்போம். இந்த விவாகரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை ஒருங்கிணைப்பது நல்லது தான்' என்று கூறினார்.

இதையும் படிங்க: குமரி சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை: நெல்லையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.