மாநில அளவில் கடந்த சில வாரங்களாகவே கரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. அதேபோல், தலைநகர் சென்னையிலும் அதன் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதிகப்படியான பாதிப்புகளை கண்ட அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இருப்பினும் எண்ணிக்கை அளவில், அண்ணாநகரில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்து இருந்த நிலையில், தற்போது கோடம்பாக்கத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த்தொற்று ஒருபுறம் இருந்து வந்தாலும், மாநகரத்தில் குணமடைந்தோரின் விழுக்காடு 96 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோர் 2% ஆகவும் உள்ளது ஆறுதலை அளிக்கிறது.
சென்னையில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 801 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 2 லட்சத்து 05 ஆயிரத்து 944 பேர் முழு குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 020 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 3 ஆயிரத்து 837 பேர் இதுவரை இத்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியான பாதிக்கப்பட்டோர் பட்டியல்,
- அண்ணா நகர் - 23,563 பேர்
- கோடம்பாக்கம் - 23,039 பேர்
- ராயபுரம் - 18,987 பேர்
- தேனாம்பேட்டை - 20,508 பேர்
- தண்டையார்பேட்டை - 16,632 பேர்
- திரு.வி.க. நகர் - 17,006 பேர்
- அடையாறு - 16,943 பேர்
- வளசரவாக்கம் - 13,559 பேர்
- அம்பத்தூர் - 15,126 பேர்
- திருவொற்றியூர் - 6,554 பேர்
- மாதவரம் - 7,735 பேர்
- ஆலந்தூர் - 8,692 பேர்
- சோழிங்கநல்லூர் - 5,693 பேர்
- பெருங்குடி - 7,844 பேர்
- மணலி - 3,394 பேர்
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 93 லட்சத்தை தாண்டிய பாதிப்பு