வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக புதிய அறிவிப்பை பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு:
1. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுகோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் ரூபாயை 7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்.
2. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தினை சீரமைத்து புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் ரூபாய் 7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்.
3. சென்னை மாவட்டத்தில் மாதவரம் வட்டம், கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டம், கரூர் மாவட்டத்தில் கடவூர் வட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டம் ஆகிய வட்டங்களில் சிறப்பு வட்டார சமூக பாதுகாப்பு திட்டம் பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 1.11 கோடி செலவில் தோற்றுவிக்கப்படும்.
4. மாவட்டங்களில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
5. தமிழ்நாட்டில் பழுதடைந்த நிலையில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களுக்கு பதிலாக, புதிய அலுவலகங்கள் ரூபாய் 50. 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
6. தமிழ்நாட்டில் பழுதடைந்த நிலையில் உள்ள 50 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் ரூபாய் 13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
7. நாகப்பட்டினம் நகராட்சி நம்பியார் நகரில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்படும்.
8. 38 மாவட்டங்களில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ரூபாய் 1.50 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும்.
9. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்திடவும் ரூபாய் 10.51 கோடி வழங்கப்படும்.
10. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் திறன்களை மேம்படுத்த மீட்பு வாகனங்கள் ரூபாய் 2.47 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
11. பேரிடர் தொடர்பான பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் செயல்பட்டுவரும் பேரிடர் மேலாண்மை மையம் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு தகுதி மையமாக தரம் உயர்த்தப்படும்.
12. நில சீர்திருத்த ஆணையகரத்தில் மின்னனு அலுவலக நடைமுறை மற்றும் இணைய வழியில் சேவைகளை மேம்படுத்த கணினிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்திட ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும்.
13. நகர்ப்புற புலவரைபடம் இணைய வழியில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்படும்.
14. புவியியல் தகவல் அமைப்பு பிரிவு ரூபாய் 14.22 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.
15. புவியியல் தகவல் அமைப்பிலுள்ள முதுநிலை அலுவலர்களுக்கு ரூபாய் 10 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
16. நில அளவை இயக்குனரகம் மற்றும் 5 மாவட்ட நில அளவை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 73.29 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
17. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாரைக்கிணறு மலை கிராமத்தில் 2474 ஏக்கர் நிலத்தில் அசல் நிலவரி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் 1500 குடும்பங்கள் பயனடையும் வகையில் பட்டா வழங்கப்படும்.
18.கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரியப்பகுதியை சுற்றியுள்ள விஜயமாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் அசல் நிலவரித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் பட்டா வழங்கப்படும்.
19. நகர்புறங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை விரைவுபடுத்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
20.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 800 குடும்பங்கள் பயன் பெறுவர்.
21.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சிங்கராயன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 350 குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
இதையும் படிங்க: முதலில் எடப்பாடியை கண்டியுங்கள்; ஓபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு அறிவுரை