ETV Bharat / city

கே.எஃப்.ஜே. நகைக்கடை மோசடி வழக்கு: சொத்துகளைப் பறிமுதல்செய்ய திட்டம்

கே.எஃப்.ஜே. நகைக்கடை உரிமையாளர்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல்செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேஎப்ஜே நகைக் கடை மோசடி வழக்கு
கேஎப்ஜே நகைக் கடை மோசடி வழக்கு
author img

By

Published : Sep 27, 2021, 10:11 AM IST

சென்னை: மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கே.எஃப்.ஜே. எனப்படும் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட கேரளா பேஷன் ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டுவந்தது.

இந்த நகைக்கடையின் மேலாண் இயக்குநராக சுஜித் செரியன், இயக்குநர்களாக அவரது மனைவி தான்யா, சகோதரர் சுனில் செரியன் ஆகியோர் இருந்தனர்.

பணச்சீட்டு நடத்துவதுபோல, இந்நிறுவனம் பல்வேறு பெயர்களில் தங்க நகை சேமிப்புத் திட்டங்களை அறிவித்தது. அதன்மூலம், பொதுமக்களிடமிருந்து பழைய தங்க நகைகளையும், பணத்தையும் வாங்கிக் கொண்டது.

ஆனால், திட்டத்தின் அடிப்படையில் நகைச்சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்குப் பணமோ, தங்கத்தையோ திருப்பிக் கொடுக்கவில்லை. திட்டங்கள் முதிர்வடைந்த சிலருக்கு நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டன.

ரூ.26 கோடி மோசடி

இதனால் 2019ஆம் ஆண்டு சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கே.எஃப்.ஜே. ஜுவல்லரி நகைக்கடை மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்தப் புகார்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டன. ஆயிரத்து 638 பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி 26 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கே.எஃப்.ஜே. ஜுவல்லரி நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக நிறுவனத்தின் பெயரிலும் நிர்வாக இயக்குநர் சுனில் செழியன், இயக்குநர்கள் சுஜித் செழியன், நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் மீது தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கே.எஃப்.ஜே. நிர்வாகிகள் கைது

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஓர் ஆண்டு கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், இந்தாண்டு தொடக்கத்தில் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

சொத்துகளை விற்று எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக கே.எஃப்.ஜே. நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்களிடம் கே.எஃப்.ஜே. நிர்வாகிகள் எழுதிக் கொடுத்தனர்.

பின்னர், எட்டு மாதங்களாகியும் எழுதிக் கொடுத்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பிக் கொடுக்காததால் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், கே.எஃப்.ஜே. நிர்வாகிகள் சுனில் செரியன், சகோதரர் சுஜித் செரியன் ஆகிய இருவரையும் கைதுசெய்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

பிணை கோரி வழக்கு

இந்நிலையில் சுனில் செரியன், சுஜித் செரியன் ஆகிய இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல்செய்திருந்தனர். நகைத் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் அனைத்து முதலீட்டாளர்களும் பணத்தை கேட்டதால் கேரளா பேஷன் ஜுவல்லரி நிர்வாகம், தங்களிடமுள்ள சொத்துகளை விற்று பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

இருப்பினும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், இந்த வழக்கில் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்ற அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் கேரளா பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் சுனில் செரியன், சுஜித் செரியன் ஆகியோருக்கு பிணை தர நீதிமன்றம் மறுத்தது.

கே.எஃப்.ஜே. நிர்வாகிகள் சென்னையில் இரண்டு சொகுசு பங்களாக்கள் சொத்துகளாகச் சேர்த்துவைத்திருப்பதால், அதைப் பறிமுதல் செய்யவுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் தற்கால மதிப்பீட்டை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட ஆயிரத்து 638 பேருக்கு அளிக்க வேண்டிய 106 கோடி ரூபாயைத் திரும்பச் செலுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள கே.எஃப்.ஜி. நகைக்கடை மேலாளரையும் தேடிவருவதாகப் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 80 லட்சம் ரூபாய் மோசடி - பெண்கள் உட்பட 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.