சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் பாரதிய ஜன சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. இதில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிபிஎஸ்இ வாரியமே வினாத்தாள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறது.
தொடரும் சாதிய வன்கொடுமை: பட்டியலினத்தவரை சிறுநீர் குடிக்கவைத்துக் கொடூரக் கொலை!
அந்த வகையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் நடந்த சமூக அறிவியல் தேர்வில், சரியான விடைகளை நிரப்புக பகுதியில் தான் அந்த அதிர்ச்சியூட்டும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
#1YearofPariyerumPerumal: சாதி வெறியர்களால் கொல்லப்படாத ரோஹித் வெமுலா!
ஆம். அந்த 15ஆவது கேள்வியாக "பாரதிய ஜன சங்கம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அதன் சின்னம் என்ன? இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடே பாரதிய ஜன சங்கம் தொடங்க அடிப்படையாக இருந்ததாக மாணவர்கள் குறிப்பிட்டு விடை அளிப்பது போன்று கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
இதேபோல, முன்னதாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பட்டியலின சமூகத்தினரையும், இஸ்லாமிய சமூக மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகள் இருந்ததை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.