ETV Bharat / city

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு 3 வாரங்களுக்கு தள்ளிவைப்பு! - dmk mp kanimozhi

சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Feb 25, 2021, 12:20 PM IST

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாகத் தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துராமலிங்கம் என்பவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று (பிப். 25) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும், மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசை எதிர்த்ததால்தான் 2ஜி வழக்கை தோண்டுகிறார்கள் - கனிமொழி காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.