ETV Bharat / city

அனைவருக்கும் சமமான கல்வி ஏற்படுத்திதர வேண்டும்- காமராஜர் பேத்தி வலியுறுத்தல் - காமராஜர்121ஆவது பிறந்தநாள்

அனைவருக்கும் சமமான கல்வியை ஏற்படுத்தித் தர வேண்டும் என காமராசர் பேத்தி கமலிக்கா காமராஜர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

அனைவருக்கும் சமமான கல்வி ஏற்படுத்திதர வேண்டும்- அரசின் மீது காமராஜர் பேத்தி ஆதங்கம்

author img

By

Published : Jul 15, 2022, 10:28 AM IST

Updated : Jul 15, 2022, 11:09 AM IST

சென்னை: பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் குமாரசாமி – சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வியில் மறுமலர்ச்சி: தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடைய செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு : 1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டுமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தான் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராகவும் விளங்கினார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, அடக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

அனைவருக்கும் சமமான கல்வி ஏற்படுத்திதர வேண்டும்- காமராஜர் பேத்தி வலியுறுத்தல்

விருதுநகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் அரசுடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டு 20.08.1975 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை தியாகராய நகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் 21.06.1978 அன்று முதல் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் 02.10.2000 அன்று காமராசர் மணிமண்டபமும், விருதுநகரில் 01.03.2006 அன்று பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.

கமலிக்கா காமராஜர் சிறப்பு பேட்டி :கர்மவீரர் காமராஜரின் 120ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஈடிவி பாரத்திற்கு காமராசர் பேத்தியும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருமான கமலிக்கா காமராஜர் சிறப்பு பேட்டி அளித்தார்.

சீருடை கொண்டு வந்து தீண்டாமை ஒழித்தவர்: கமலிக்கா கூறுகையில், ‘கல்விக்காக காமராஜர் அந்த காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது ஆட்சி காலத்தில் ஏழு சதவீதமாக இருந்த கல்வி தரத்தை 27 சதவீதமாக உயர்த்தியவர். கல்வித் துறையில் காமராசரின் தொலைநோக்குப் பார்வை தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏழை, பணக்காரன், ஜாதி உள்ளிட்டவை, மாணவர்கள் மத்தியில் தெரியாத வண்ணம் இருக்க சமச்சீரான சீருடை கொண்டு வந்து தீண்டாமை என்பதை ஒழித்து கட்டினார். மேலும் ஏழை மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர மதிய உணவு என்னும் மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து உயர் கல்வி மற்றும் உயர் வேலைகளில் பணி அமர்த்தப்பட்டனர். அவரது ஒன்பதரை ஆண்டுகள் ஆட்சியில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, மக்களுக்காக சிறப்பான வகையில் ஆட்சி நடைபெற்றது. அருவியைக் கூட எவ்வாறு சேமித்து, தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம் என்று யோசிப்பவர்’ என தெரிவித்தார்.

அனைவரையும் சமமாக பார்த்தவர்: அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்து சமய அறநிலைத்துறைக்கு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கு அமைச்சரவை கொடுத்து அழகு பார்த்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவை, நேரில் சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களான தொழிற்சாலை உருவாக்குதல், உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க உரிமையுடன் கேட்டு பெற்றுதந்தவர். காந்தியின் கொள்கையை கடைசி வரை பின்பற்றினார் என கூறினார்.

மேலும் 1953இல் ஜவர்கலால் நேருவிடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என கேட்டு பெற்று தந்தார். நேருவின் நெருங்கிய நண்பராகவும் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகவும் சிறந்து விளங்கியவர். காந்தியின் கொள்கையை கடைசி வரை பின்பற்றியவர். காமராஜர் ரஷ்யா சென்றபோது, அங்கு லெனின் உடல் பதப்படுத்தி வைத்திருப்பதை கண்டு, நாம் காந்தியின் உடலை பதப்படுத்தி வைத்திருந்திருக்கலாம் என ஆர்.வெங்கட்ராமனிடம் தெரிவித்திருந்தார். காமராஜர் மக்களுக்காக வாழ்ந்த எளிமையான தலைவர்.

தமிழ்நாடு அரசின் திட்டம் வரவேற்க்கத்தக்கது:1248 அரசு பள்ளிகளை மூடி, அதனை நூலகமாக மாற்ற முடிவு செய்திருப்பதாக அரசு சார்பில் 2018 ஆம் ஆண்டில் ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. அதற்காக தான் எதிர்ப்பு தெரிவித்து போராடி, பின்னர் அது கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.

ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் காமராசர் பிறந்தநாள் அன்று தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் வரவேற்கக் கூடியது, இந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்தினால் மாணவிகளின் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரிக்கும்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது ஆனால், அந்த திட்டத்தின் மீதான பார்வை கடைசி வரைக்கும் முழுவதுமாக இருந்து அதன் மூலம் மக்கள் பயன் பெற வேண்டும். அரசு பதவியில் இருக்கும் தலைவர்கள், அலுவலர்கள் உட்பட யாராக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும், இதன் மூலம் பொதுமக்களும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள் என கூறினார்.

நாம் அரசு ஊழியராக வர பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம் ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கிறதை இழிவாக கருதும் சமூகமாக தற்போது விளங்குகிறது. இதனை மாற்ற வேண்டுமெனில் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்த கல்வி என்பது, பொதுவாக இருந்தது ஏற்றத்தாழ்வுகள் இல்லாத கல்வியாக இருந்தது. பணம் பேச்சுவார்த்தை இல்லாத கல்வியாக இருந்தது.

தற்போது தனியார் மையம் என்பது அனைத்திலும் இருப்பது போல் கல்வியிலும் தனியார்மயம் இருப்பதன் காரணமாக கல்வி தரம் இப்படி உள்ளது. பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், அதாவது அரசு பள்ளிகள் மட்டுமே செயல்பட வேண்டும்.

காங்கிரஸ் தனித்து போட்டியிட தயார்:வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், ஆகிய தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை அமையும் என்றால், தனித்து நிற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜவஹர்லால் நேரு ஆட்சி, காமராஜர் ஆட்சி, குறித்து மக்களிடம் கொண்டு சேர்த்து, விட்ட இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை கடைக்கோடி தொண்டரிடமும் உள்ளது.

சுதந்திரத்திற்கு முன் இருந்த தலைவர்கள் மக்களுக்கான தலைவராக இருந்தார்கள், தற்போது உள்ள தலைவர்கள், ஒருத்தர் அல்லது இருவருக்காக செயல்படும் தலைவராக இருக்கின்றனர். தலைவர்கள் சரியாக இருந்தால் இந்த நிலைமை மாறும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கண் இமையால் காமராஜர் உருவத்தை வரைந்த ஒவியர்...

Last Updated : Jul 15, 2022, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.