கரோனாவால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஸ்தம்பித்து போயுள்ளது. இதுவரை 206 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இச்சூழலில் நாட்டு மக்களிடம் நேற்று உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையேற்று மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் மக்கள் வீதியில் நடமாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை ரத்து, பால் விநியோகம் நிறுத்தம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதமரின் உரையை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில், பிரதமரின் ‘மக்கள் ஊரடங்கு’ அழைப்புக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், இத்தகைய அசாதாரண சூழலில் அசாதாரண முடிவுகளை நாம் எடுத்தே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
">I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
இந்தப் பேரழிவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஒற்றுமையுடன் மக்கள் ஊரடங்கைப் பின்பற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும் எனவும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு: மார்ச் 22ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து!