சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொழிற்சங்கப் பேரவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
மநீமவின் அடிப்படைத் தகுதி நேர்மை:
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "மக்கள் நீதி மய்யத்திற்கென்று அடிப்படை தகுதி என்று ஒன்று இருக்கிறது, அது நேர்மை. அது இங்கே மிக அவசியம்.
கண்ணதாசன், கருணாநிதி, இளங்கோவன் இவர்களுடைய வரிகளையும் வசனங்களையும் புரிந்து கொண்ட தமிழ்நாட்டில் என் வசனம் புரியாதா? நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்.
வாழ்க தமிழ்நாடு
கட்சி தொடங்கும் போது அனைவரும் பதறினார்கள். நான் அப்போது சொன்னேன். நீங்கள் பதற வேண்டும் என்று கூறி அவர்களை அழைத்தேன். எவருக்கும் தோல்விகள் ஏற்படும்.
ஆனால், ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும். லாங் லைவ் ( long live) தமிழ்நாடு.
ஆசியாவின் முதல் நடுநிலைக் கட்சி
காந்தியைப் பயன்படுத்துவது தவிர, வேற வழி எங்களுக்கு இல்லை. காந்திதான் எனக்கும் தலைவர்.
இது தாமதமாக ஆனது எனக்கு ஆச்சர்யம். எனது தலைவர் காந்தி தான் என்று சொல்வதால், எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
காந்தி மாதிரியான ஆட்கள்தான் இன்றைய தேவை. இனி, இந்தியா இப்படி தான் இருக்கும் என்பவர்களால் மட்டும் தான் நல்ல அரசியல் செய்ய முடியும். மேலும் ஆசியாவில் முதல் (centrism) நடுநிலையான கட்சி மக்கள் நீதி மய்யம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் வீரர்கள் 'உண்மையான உலக நாயகர்கள்' - கமல் வாழ்த்து