ETV Bharat / city

கள்ளக்குறிச்சி சம்பவம்: மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையை தடுக்கிறதா தமிழ்நாடு அரசு? - srimathi

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விசாரணை நடத்த செல்வதாக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவித்ததும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையாக பணியாளர்களை திரும்பப் பெற்றுள்ளது. இதனால் விசாரணையை நடத்துவதில் ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை செய்வதில் சிக்கல்

author img

By

Published : Jul 20, 2022, 12:34 PM IST

Updated : Jul 20, 2022, 12:40 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சென்னை கீழ்பாக்கத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான பணியாளர்களை சமூகநலத்துறை அளித்து வருகிறது.

திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கம் செய்து பிப்ரவரி மாதம் 22 ந் தேதி அறிவித்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 13 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக திட்டமிட்டது. இதற்காக, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் குழுவினர் நேரில் இன்று (ஜூலை 20) நேரில் செல்ல இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிரடியாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். எனவே அவர்கள் பதவி ஏற்ற பின்னர் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலரான வளர்மதி, ஆணைய தலைவரின் ஓட்டுனர் உட்பட 3 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று கள்ளக்குறிச்சிக்கு சென்று மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம். எனவே பணியாளர்களை உடனடியாக மீண்டும் நியமிக்க வேண்டும் என, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். விசாரணையை நடத்தக் கூடாது என்று வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு இப்படி செய்வதாக ஆணைய உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு

Last Updated : Jul 20, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.