ETV Bharat / city

குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்... ஸ்ரீமதியின் தாயார் செல்வி...

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஸ்ரீமதியின் தாயார் செல்வி தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மனு வழங்கினார்.

ஸ்ரீமதியின் தாயார் செல்வி
ஸ்ரீமதியின் தாயார் செல்வி
author img

By

Published : Aug 27, 2022, 1:49 PM IST

Updated : Aug 27, 2022, 2:13 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாாளிகள் தண்டிக்கப்பட வேண்கும் என்று மனு வழங்கினார். அதன்பின் ஸ்ரீமதியின் தாயார் செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "எனது மகளின் வழக்கை குறுகிய காலத்திலும், குற்றவாளிகள் தப்பிக்க விடாமலும் விசாரிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

அந்த பள்ளி நிர்வாகிகள் சிலர் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தப்பிக்க விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு பரிசோதனை ஆவணம் மட்டுமே வழங்கப்பட்டது. வீடியோ ஆதாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடர்பாக எந்த ஆவணம் எங்களிடம் கொடுக்கப்படவில்லை. எனது மகளின் உடற்கூராய்வில் முழு திருப்தி இல்லை. நாங்கள் கேட்ட மருத்துவர்கள் வைத்து உடற்கூறு ஆய்வு செய்து இருந்தால் திருப்தி அடைந்து இருப்போம்.

பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை எங்களிடம் ஏன் காட்டவில்லை. பள்ளி நிர்வாகம் தரப்பு அழுத்தம் கொடுத்து விசாரணையை நடத்தி விடாமல் செய்கின்றனர். இந்த வழக்கில் முதலமைச்சர் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதி நிலை நாட்டுவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும்.

ஸ்ரீமதியின் தோழிகள் என்று பள்ளி மாணவிகள் சிலர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உண்மையில் ஸ்ரீமதியின் தோழிகள் தானா என்பது எனக்கே தெரியவில்லை. அவர்கள் யார் என்ற பெயர் பட்டியல் எனக்கு வந்தால்தான் உண்மையிலேயே, அவர்கள் ஸ்ரீமதியின் தோழிகளா என்பதை நான் சொல்ல முடியும்.

பள்ளி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் சில அப்பாவி பள்ளி மாணவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் உடனடியாக விரைந்து விடுவிக்கப்பட வேண்டும்"என்றார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பாக 600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்

Last Updated : Aug 27, 2022, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.