கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (22), வணக்கம் தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு