சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய செயலாளரான அய்யப்பா, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தையல் அம்மாள், கள்ளக்குறிச்சி முன்னாள் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு ஆகியோர் 35 கோடியே 65 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கு மீறி சொத்துகுவிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று(பிப்.10) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், இதுதொடர்பாக 6 வாரங்களில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்.
விசாரணையின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை, மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை கீரனூர் பிடாரி அம்மன் கோயில் சிலைகளை விசாரணைக்கு ஒப்படைக்க இடைக்காலத்தடை