ETV Bharat / city

நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க உத்தரவு

Judge Kalaiyarasan ordered to submit the report of the inquiry commission to Surappa

author img

By

Published : Feb 11, 2022, 10:56 AM IST

Updated : Feb 11, 2022, 2:15 PM IST

10:51 February 11

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் அவருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கத்தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்தது. அப்போது, இந்த விசாரணை அறிக்கையின் நகலை சூரப்பாவுக்கு வழங்குவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பில், விசாரணையின் அறிக்கையை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்குத் தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க அரசு ஏன் தயங்குகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால் தான் சம்பந்தப்பட்ட நபர் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க முடியும் எனத் தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான் பணி என்றும், அரசியலமைப்புச் சட்ட பணி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சூரப்பா தரப்பில் தனக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதே, வேந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது.

அனைத்துதரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பார்த்திபன், நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை இரண்டு வாரங்களில் சூரப்பாவுக்கு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வேந்தருக்கு அறிக்கையை அனுப்பும் முன்பாக அதை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணை அறிக்கை தொடர்பாக நான்கு வாரங்களில் சூரப்பா தனது விளக்கத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சூரப்பா வழக்கில் நீதிபதி பார்த்திபனின் உத்தரவு:

சூரப்பா வழக்கினை விசாரிக்கும் நீதிபதி பார்த்திபன் வழங்கிய உத்தரவின் முழுவிவரம், 'இயற்கை நீதிப்படி சம்பந்தப்பட்டவர் தரப்பு கருத்தைக் கேட்காமல் தண்டிக்கக்கூடாது என்றும், இந்த வழக்கைப் பொறுத்துவரை எந்த ஒரு நியாயமான காரணத்தை கூறமாலும், சட்டரீதியான தாக்கங்களை கருத்தில் கொள்ளாமலும் அறிக்கையை வழங்கவே முடியாது என்ற அரசின் நிலைப்பாடு விநோதமாக உள்ளதாக நீதிபதி பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

துறை ரீதியான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அறிக்கை நகல்களை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்கும் அரசு, இந்த வழக்கில் அரசு வழங்க தயங்குவது ஏன் என தெரியவில்லை என்றும், பதவியிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க சூரப்பாவுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, 2 வாரங்களில் அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நகல் கிடைத்த 4 வாரங்களில், சூரப்பா, தனது விளக்கத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சூரப்பாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு முடிவுசெய்தால், அவரது ஆட்சேபங்களை பெற்ற பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும்' எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை திடீர் மழையால் அச்சத்தில் விவசாயிகள்!

Last Updated : Feb 11, 2022, 2:15 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.