ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலின், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி அண்மையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

முன்னதாக தங்களுக்கு பிடித்த எந்த கட்சியில் வேண்டும் என்றாலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் சேர்ந்துகொள்ளலாம் என்றும் எந்த கட்சியில் இருந்தாலும் நீங்கள் ரஜினியின் ரசிகர் ஏற்பதை மறந்து விடாதீர்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்