சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஜனவரி 24ஆம் தேதிக்கான கோவிட்-19 பாதிப்பு புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், “புதிதாக 62 ஆயிரத்து 405 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 566 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த மூன்று நபர்களுக்குமென 569 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 30 ஆயிரத்து 315 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் 8 லட்சத்து 34 ஆயிரத்து 740 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றில் 4 ஆயிரத்து 904 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 642 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 17 ஆயிரத்து 520 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் என 7 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,30,195
- கோயம்புத்தூர் - 54,021
- செங்கல்பட்டு - 51257
- திருவள்ளூர் - 43,399
- சேலம் - 32,296
- காஞ்சிபுரம் - 29,162
- கடலூர் - 24,881
- மதுரை - 20,923
- வேலூர் - 20,659
- திருவண்ணாமலை - 19,330
- தேனி - 17,052
- தஞ்சாவூர் - 17,617
- திருப்பூர் - 17,734
- விருதுநகர் - 16,540
- கன்னியாகுமரி - 16,740
- தூத்துக்குடி - 16,249
- ராணிப்பேட்டை - 16,085
- திருநெல்வேலி - 15,523
- விழுப்புரம் - 15,152
- திருச்சிராப்பள்ளி - 14,588
- ஈரோடு - 14,224
- புதுக்கோட்டை - 11,526
- கள்ளக்குறிச்சி - 10,867
- திருவாரூர் - 11,146
- நாமக்கல் - 11,541
- திண்டுக்கல் - 11,185
- தென்காசி - 8,391
- நாகப்பட்டினம் - 8,394
- நீலகிரி - 8,156
- கிருஷ்ணகிரி - 8,039
- திருப்பத்தூர் - 7,553
- சிவகங்கை - 6,638
- ராமநாதபுரம் - 6,402
- தர்மபுரி - 6,565
- கரூர் - 5,373
- அரியலூர் - 4,675
- பெரம்பலூர் - 2,261
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 940
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1033
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428