ETV Bharat / city

கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை - ஜம்தாரா கும்பல் வாக்குமூலம் - Jamthaara gang testimony to police

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜம்தாரா கும்பல் சொகுசு வீடு, விலையுயர்ந்த ஆபரணம், சொகுசு கார் என கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்தாரா கும்பல்
ஜம்தாரா கும்பல்
author img

By

Published : Oct 30, 2021, 7:08 PM IST

Updated : Oct 30, 2021, 7:33 PM IST

சென்னை: செல்போன் சேவை துண்டிக்கப்படவுள்ளதாக கூறி ஓடிபி எண்ணைப் பெற்று 13 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர், கொல்கத்தாவிற்குச் சென்று ஜம்தாரா சைபர் கிரைம் மோசடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஜார்கண்ட் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிஷ்வ நாத் மண்டல், பாபி மண்டல், ராம்புரோஷாத் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், 148 கிராம் தங்கம், 1 ஹோண்டா சிட்டி கார், 19 ஏடி எம்கார்டுகள், 160 சிம் கார்டுகள், 20 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல் துறைக்கு நன்றி

இந்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் காவல் துறையினர் கொல்கத்தா சென்றபோது அவர்களுக்கு தமிழ் அலுவலர் ஒருவர், உதவியதாக இருந்ததாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு காவல் துறை வெளிமாநிலங்களுக்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்க செல்லும்போது அந்த மாநில காவல் துறை போதுமான ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் எனக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழலில் கொல்கத்தாவில் டிஐஜி அந்தஸ்தில் உள்ள தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர் சுதாகர், மேற்கு வங்க கேடரில் தேர்வாகி ஹவுரா நகரில் காவல் ஆணையராக பணிபுரிந்து வரும் இவர், ஜம்தாரா கும்பலை பிடிக்க பெரிதும் உதவியாக இருந்துள்ளார். குறிப்பாக இருப்பிடம், சைரன் வாகன வசதி, மொழிபெயர்ப்பாளர், உணவு போன்றவற்றை கொடுத்து உதவி புரிந்துள்ளார். இவருக்கு சென்னை காவல் துறை உயர் அலுவலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பெற்று மோசடி

இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஏழ்மை நிலையில் உள்ள ஜம்தாரா மாவட்டத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிற மாநிலத்திற்கு சென்று பல பேர் பணிபுரிந்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வந்து அதையே வாழ்க்கையின் லட்சியமாக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக டெல்லியில் சொந்தமாக சொகுசு வீடு வாங்க வேண்டும் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சைபர் மோசடி குறித்த பயிற்சியை ஒருவரிடம் மேற்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தென் மாநிலங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும், 95000 என்ற பொதுவான 5 எண்ணுடன் 5 வெவ்வேறு எண்களை இணைத்து குறுந்தகவல் அனுப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சிக்கிய கொள்ளையர்கள்

ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்டோருக்கு குறுந்தகவல் அனுப்புவதாகவும், அதில் சிக்குவோரிடம் செயலியை பதிவேற்றம் செய்யக்கூறி ஓடிபியை திருடி பணத்தை மோசடி செய்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். குறிப்பாக ராம்புரோஷாத் போலி ஆவணங்களை சமர்பித்து சிம்கார்டு வாங்குவதும், பயன்படுத்திய ஒரு சில நாட்களில் சிம்கார்டை தூக்கி எறிவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் கொள்ளையில் ஈடுபடும் போது சொந்த ஊர் மற்றும் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருந்தால் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்து பல மாநிலங்களுக்கு தாவி வருவதாகவும், இதனால் காவல் துறையினரிடம் சிக்கியதில்லை என தெரிவித்துள்ளனர். குறிப்பாக மோசடி செய்த பணத்தை 19 வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை எடுப்பதால், காவல் துறையினர் தங்களை நெருங்க முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஜம்தாரா கும்பல்

தீவிர விசாரணை

கொள்ளையடித்த பணத்தில் மூவரும் வாடகைக்கு சொகுசு வீடு, சொகுசு கார், விலையுயர்ந்த ஆபரணங்கள் என ஆடம்பர வாழ்க்கை வந்ததாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் புதிதாக புக் செய்த சொகுசு கார் ஒன்றை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் இந்த கும்பல் உபயோகப்படுத்தி வைத்துள்ள சிம்கார்டுகளின் எண்களை வைத்து யாருக்கெல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதே போல் எத்தனை நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: யார் இந்த ஜம்தாரா கொள்ளையர்கள்? - பயிற்சி பெற்று சைபர் மோசடியில் ஈடுபடும் ஊர் மக்கள்

Last Updated : Oct 30, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.