ETV Bharat / city

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் இன்று நிறைவு பெறுமா? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைக்காக போராடி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை
author img

By

Published : Sep 23, 2019, 1:11 PM IST

கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்கள் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை( 17 b) எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை 17 பி-யை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 6ஆம் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், செப்டம்பர் 13 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பேரணியும் நடத்தப்பட்டது. மேலும் நாளை மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த பின்னரே அரசுகளின் கோரிக்கை குறித்து எடுக்கும் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையும் படியுங்க:

ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டம்

மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய ஜாக்டோ ஜியோ!

Intro:ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன்
அரசு இன்று பேச்சுவார்த்தை

Body:ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன்
அரசு இன்று பேச்சுவார்த்தை

சென்னை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைக்காக போராடி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசின் சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அரசு பள்ளிகளை மூட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை( 17 b) எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோன்று சில அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் பொழுது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை 17 பி திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
செப்டம்பர் 6 ம் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும்,13 ந் தேதி கல்வி மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது..
செப்டம்பர் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த பின்னரே அரசுகளின் கோரிக்கை குறித்து எடுக்கும் முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.