ETV Bharat / city

தடுப்பூசி இலவசமாகச் வழங்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை - வைகோ

author img

By

Published : Apr 21, 2021, 9:08 PM IST

தனியார் மருத்துவமனைகளிலும், வெளிச் சந்தையிலும் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வருவது ஆபத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ, VaiKo, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ
It's responsibility For Central Government to provide free corona vaccine! VaiKo

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில்

"கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், கரோனா கோவிஷீல்டு தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அறிவித்து இருந்த நிலையில், தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வருவது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயிக்கும் போக்கு நல்லதல்ல. கோடிக்கணக்கான மக்கள் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பெற்று, அதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளிலும், வெளிச் சந்தையிலும் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வருவது ஆபத்தாகும்.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் விலையை இருமடங்கு உயர்த்தி இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முனைய வேண்டும். இதில் மத்திய-மாநில அரசுகள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பெரும் கேடு விளைவிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை அழைத்தால் பிரதமர் இல்லை- கமல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.