ETV Bharat / city

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த தாமதமாகும் - தமிழ்நாடு உயர் கல்வித்துறை - implement the new education policy

சென்னை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தாமதமாகும் என்பதால் கால அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உயர் கல்வித்துறை அமைச்சர்
உயர் கல்வித்துறை அமைச்சர்
author img

By

Published : Nov 10, 2020, 3:10 PM IST

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதை தற்போதே அமல்படுத்தக் கோரி மாநில அரசுகளை மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மும்மொழிக் கொள்கை, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு, கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் போன்ற அம்சங்களுக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்துக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தது.

அதில், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே அமல்படுத்தப்படும், கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவுறுத்தியது. மேலும், தற்போதைய சூழலில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது எனவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.