அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தான் எந்த ஒரு பணமும் பெறவில்லை எனவும்; தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: துணை வேந்தர் சூரப்பா சர்ச்சை: நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு!