இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிஎஸ்எல்வி சி-16 விண்ணில் செலுத்தப்பட்டது. இது எந்த ஒரு பருவ மாற்றமாக இருந்தாலும், அதனை உடனே அனுப்பும். இதுபோல் மேலும் சில விண்கலத்தை அனுப்ப இந்தியா முயற்சித்து வருகிறது. சந்திராயன்-2 என்ற விண்கலத்தை ஜூலை 9ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப். 6ஆம் தேதி சந்திரனில் தரை இறங்கும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அதி நவீன சாட்டிலைட் அனுப்பவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விண்ணிலிருந்து படம் எடுக்கும்போது மேக மூட்டங்கள் இருந்தால் சரியாக இருக்காது. ஆனால் தற்போது அனுப்பப்பட்ட விண்கலம் மூலம் மேக மூட்டங்கள் இருந்தாலும், இரவு நேரமாக இருந்தாலும் படங்கள் தெளிவாக இருக்கும்.
விரைவில் பல்வேறு விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.