ETV Bharat / city

6 மாதத்திற்கு மட்டும் தான் அம்மா மினி கிளினிக்கா?

author img

By

Published : Dec 23, 2020, 7:28 PM IST

சென்னை: நர்சிங் மற்றும் மருத்துவப் பணியாளர்களை 6 மாதத்திற்கு மட்டும் அவுட் சோர்சிங் முறையில் நியமனம் செய்யும், பொது சுகாதாரத்துறையின் உத்தரவால் முதலைமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

clinic
clinic

தமிழகத்தில் 2,000 ’முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்’கள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. இவற்றில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், செவிலியர், மருத்துவப் பணியாளர் ஆகியோரை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” அம்மா மினி கிளினிக்கிற்கு தேவையான செவிலியர், மருத்துவப் பணியாளர் பணியிடங்கள், அவுட் சோர்சிங் முறையில் மார்ச் 2021 வரை நிரப்பப்பட வேண்டும். செவிலியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 ம், மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.6,000 ம் வழங்க வேண்டும்.

அவுட் சோர்சிங் குறித்த பொது சுகாதாரத்துறையின் உத்தரவு!

செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரியில் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மருத்துவப்பணியாளர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், மருத்துவமனை பணிகளை செய்யும் வகையில் உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.

மேலும், இப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை. இந்தப் பணியில் சேர்பவர்கள் பின்னர் தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்க முடியாது ” எனக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தனியார் நிறுவனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதியில் 200 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

6 மாதத்திற்கு மட்டும் தான் அம்மா மினி கிளினிக்கா?

இது குறித்து ஓய்வுபெற்ற அரசு மருத்துவரும், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான அமலோற்பவநாதன் கூறும் போது, ” மினி கிளினிக் திட்டம் என்பது வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அதற்கு தேவையான பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். 6 மாதம் நடத்துவது என்பது பலனை அளிக்காது ” எனக் கூறினார்.

பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறும் போது, ” மினி கிளினிக் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் அல்ல. 4 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஹெல்த் அண்டு வெல்னஸ் சென்டர்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்காக நாடு முழுவதுமுள்ள துணை சுகாதார நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதனை கார்பரேட் நிறுவனங்கள் ஏற்று நடத்தும் எனவும் அறிவித்தார்.

மருத்துவர்கள் அவுட் சோர்சிங் மூலம் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதான் தமிழகத்தில் தற்போது மினி கிளினிக் என்ற பெயரில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து நடத்துமா? என்பதை முதல்வர்தான் விளக்க வேண்டும். இங்கு மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம் உயர்த்த வேண்டும் “ என்றார்.

மத்திய அரசின் பழைய திட்டம்தான் இந்த மினி கிளினிக்

நர்சிங் மற்றும் மருத்துவப் பணியாளர்களை 6 மாதத்திற்கு மட்டும் அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசின் இந்த நடவடிக்கையால், முதலைமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவுட் சோர்சிங் நியமனம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்யக் கோரி டிஜிபியிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.