ETV Bharat / city

சூரப்பா வழக்கு: முறைகேடு நடந்திருப்பதாகத் தமிழ்நாடு அரசு வாதம் - chennai high court news

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையில், முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Surappa has alleged financial irregularities, madras hc, anna university former vc, vc mk surappa, vc surappa scam, anna university scam, former anna university vc surappa, துணை வேந்தர் சூரப்பா, முன்னாள் துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா, சூரப்பா வழக்கு, அண்ணா பல்கலைக்கழக மோசடி வழக்கு, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக செய்திகள், anna university news, surappa news, நீதிமன்ற செய்திகள், சென்னை உயர் நீதிமன்ற செய்திகள், latest court news, chennai high court news
சூரப்பா வழக்கு
author img

By

Published : Nov 28, 2021, 1:04 PM IST

சென்னை: சூரப்பாவுக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரியும், சூரப்பா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சூரப்பா தரப்பில், அரியர் தேர்வு ரத்துசெய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சீர்மிகு உயர் கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிபதி கலையரசன் விசாரணையில், துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதனால் விசாரணை ஆணையத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.