சென்னை: சென்னையில் முதல் முறையாக 250 WTP புள்ளிகளுக்காக நடத்தப்படும், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான தகுதி போட்டிகள் வரும் (செப்.10) ஆம் தேதி மற்றும் (செப்.11) ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் வரும் (செப்.12) ஆம் தேதி முதல் (செப்.18) ஆம் தேதி வரை நடத்தப்படும். இறுதியாக (செப்.18) ஆம் தேதி சென்னை ஓபன் 2022 இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இப்போட்டிகான டிக்கெட் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், Chennaiopenwta.in என்று இணையதளத்தில் இருந்தும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
போட்டி நடைபெறும் ஏழு நாட்களுக்கும் சீசன் டிக்கெட்டுகள் ரூபாய் ஆயிரம் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரமாக உள்ளது. போட்டி தொடங்கி 15ஆம் தேதி வரையிலான நாட்களுக்கான தினசரி டிக்கெட் ரூ.100 ரூ.200 ரூ.300 ஆக உள்ளது. கடைசி மூன்று நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் 400 ரூபாய் 600 ரூபாயாக உள்ளது
இதையும் படிங்க: மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமை பெண் திட்டம்’ நாளை தொடக்கம்