ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் மகளிர் தின விழா - சென்னை செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிபுரியும் பெண்களை கௌரவிக்கும் விதமாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை விமானநிலையம்
சென்னை விமானநிலையம்
author img

By

Published : Mar 8, 2022, 11:02 PM IST

சென்னை விமான நிலையம் சார்பில் தென்மண்டல இயக்குநரகத்தில் பணிபுரியும் பெண்களை கௌரவிக்கும் விதமாக, மார்ச் 8ஆம் தேதியான இன்று 'மகளிர் தின விழா' கொண்டாடப்பட்டது.

விழாவின்போது விமான நிலைய அலுவலர்கள் பேசுகையில், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பணிகளில் 25% விழுக்காடு பெண்கள் பணிபுரிவதாகவும், ஒட்டுமொத்தமாக 400-க்கும் மேற்பட்ட பெண்கள் விமான நிலையத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஆண்களுக்கு பெண் நிகர்

விமான நிலையத்திற்கு முக்கியப் பிரமுகரான துணை ஜனாதிபதி வருகையின் போதும்கூட, 7 பெண்கள் முழுமையாக ஏர் டிராபிக் கட்டுப்பாட்டு அறையை சிறப்பாகக் கையாண்டனர். இதுபோன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறப்பாகப் பணி புரிவதாகவும் அவர்கள் கூறினர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிபுரியும் பெண்கள் கொண்டாடிய சர்வதேச மகளிர் தின விழா

பெண்களுக்குப் பரிசு

மேலும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகள் முழுவதும் பெண்கள் மட்டுமே சிறப்பாகப் பணியாற்றினர்.

மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் விமான நிலைய தென்மண்டல பொது மேலாளர்கள் முத்து, முருகானந்தம், விமான நிலையத்தில் உள்ள பெண்கள் அமைப்பின் தலைவர் ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இறுதியாக பெண்களுக்குப் பரிசு வழங்கி அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: மகளிர் தினத்தில் அம்மனாக மாறிய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.