கரோனா ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது தாமதமாவதால் நேரடியாக ஓடிடியில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த "அண்டாவ காணோம்" படம் நேரடியாக இணைய தளங்களில் வெளியாக உள்ளது.
வேல்மதி இயக்கியுள்ள இந்தப் படம் நீண்ட நாளாக வெளிவராமல் இருந்த நிலையில், ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், அவட்டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும் சங்கையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், படதயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்ததாகவும், அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடனும் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வாடகை, கடன் தொகையை அவர் உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்றும், எனவே படம் வெளியிட தடைவிதிக்க வேண்டும், தனக்கு அளிக்க வேண்டிய கடன் பாக்கியை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் "அண்டாவை காணோம்" படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
'அண்டாவ காணோம்' திரைப்படம் வெளியிட இடைக்காலத் தடை - மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
சென்னை: நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த 'அண்டாவ காணோம்' என்ற படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.