தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 11) மாநிலத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளை அறிவித்தது. அதன்படி, சிறந்த மாநகராட்சியாகத் தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சிறந்த மாநகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தஞ்சாவூருக்கு விடுதலை நாளான்று (ஆகஸ்ட் 15) 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சிறந்த மாநகராட்சியாகத் தஞ்சை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கட்டடத்தை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை
தஞ்சாவூர் மாநகராட்சி மத்திய அரசால் சீர்மிகு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) அறிவிக்கப்பட்டு 904 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகழிகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்...
- பூங்காக்கள் அமைத்தல்,
- பழமைவாய்ந்த மணிக்கூண்டு புதுப்பித்தல்,
- புதிய பேருந்து நிலையம் கட்டுதல்,
- குளங்களைத் தூர்வாரி அழகிய நடைபாதை அமைத்தல்,
- சோலார் அமைத்தல்,
- சாலை-குடிநீர் வசதி செய்து தருதல்
உள்ளிட்ட முக்கியப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் உயிர் நாடியாகத் திகழும் காவிரி ஆறு வேளாண்மைக்கு வளம் சேர்க்கிறது. சிறந்த நீர் மேலாண்மைத் திட்டங்களால் இப்பகுதி நீர் நாடு என்றும், நீர்வள நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
தஞ்சை மண்ணைத் தழுவித் தவழ்ந்தோடும் காவிரியால் இங்கு முதன்மைத் தொழிலாக வேளாண்மை இருக்கிறது. இதனால் தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள், கலைகள், கட்டடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை. இப்பகுதி சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சியின் கீழும் நாடு விடுதலை பெறும்வரை ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழும் இருந்தது.
தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு - கோபுரம் ஏறிய 'தமிழ்'!
தமிழர்களின் மதிநுட்பத்திற்கு கட்டியங்கூறும் கல்லணை, அதிசயிக்க வைக்கும் கட்டுமானமான பெருவுடையார் கோயில் (பெரிய கோயில்), சரபோஜி மஹால் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூல் நிலையம், பீரங்கி மேடை, பல புராதன சின்னங்கள் தஞ்சை மாவட்டத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகும்.
தஞ்சை பெரிய கோயிலின் ஓவியத்துடன் ஒத்துள்ள தி.மலையின் வேட்டை நாய் நடுகல்!
மாவட்டத்தின் வடக்கே கொள்ளிடம் ஆறு உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3,396.57 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று கோட்டங்களும் - கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஒன்பது வட்டங்களும் உள்ளன.
இதையும் படிங்க: புன்செய் நிலங்களை பொன் செய் நிலங்களைாக்கிய தஞ்சையின் தேம்ஸ் நதி!