காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பழைய பள்ளி கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த நீதிமன்றத்தில் 2,148 குற்ற வழக்குகளும், 2,174 உரிமைகள் வழக்குகளும் 6,476 முதல் தகவல் அறிக்கையும் நிலுவையில் உள்ளது.
மேலும் நீதிமன்ற கட்டடம் பழுதடைந்ததால் பயனாளிகளும், வழக்கறிஞர்களும் மிகவும் சிரமப்பட்டு வந்ததையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் நிர்வாக வசதிக்காகவும், மக்களின் நன்மைகளுக்காகவும் உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், புஷ்பா சத்தியநாராயணா,பவானி சுப்பிரமணியன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா ஆகியோர்களால் காணொளி காட்சி மூலம் இன்று(டிச.26) சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரான்ஸில், உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!