ETV Bharat / city

பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு! - சட்டப்பேரவை

பழங்குடியின மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற உட்கட்டமைப்பு பணிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Infrastructure
Infrastructure
author img

By

Published : May 27, 2022, 9:55 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்குப் பதிலளித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், "திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு / பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்புசுவர் அமைக்கும் பணிக்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பணை கட்டும் பணிக்கு 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்கு 5 கோடியே 57 லட்சம் ரூபாய், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்துவதற்கு 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், திண்டுக்கல் மாவட்டத்தில் சிமென்ட் கான்கீரிட் சாலை அமைக்க 58 லட்சம் ரூபாய், ஈரோடு மாவட்டத்தில் கான்கீரிட் சாலை அமைக்க 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்களுக்கான கட்டடப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நல மாணவியர் விடுதிக்கு பக்கச்சாலை நடைபாதை அமைத்தல் பணி மேற்கொள்ள 2 கோடியே 68 லட்சம் ரூபாய் என மொத்தம் 17 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மோடி எழுந்து நின்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.