ETV Bharat / city

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து; சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் 10,399 கோடி ரூபாயில் தொழில்கள் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் எட்டு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. இதனால் சுமார் 13,507 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

sign
sign
author img

By

Published : Jul 20, 2020, 1:33 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் எட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 13,507 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ஏற்கனவே, ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன், 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் முன்னிலையில் இன்று எட்டு புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த எட்டு திட்டங்களில், ஐந்து திட்டங்களுக்கு நேரடியாகவும், மூன்று திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இத்திட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், Vikram Solar நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Solar Cells & Modules உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

2. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், CGD Sathrai Pvt Limited நிறுவனத்தின், தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub நிறுவனத்தின் Ductile Iron Foundry திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், NDR Infrastructure நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், GI Agro Tech நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் (Cashewnut Processing) திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hiranandani குழுமத்தை சேர்ந்த Yotta நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ELGI Equipments நிறுவனத்தின் Air Compressors உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8. ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற் பூங்காவில், 40 கோடி ரூபாய் முதலீட்டில், JS Auto Cast நிறுவனத்தின் Foundry விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலர் சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், அரசு உயர் அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரூ.12.21 கோடியில் கீழடி அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.