சென்னை: மெரினாவில் ரூ. 1.83 கோடி செலவில் சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படவிருக்கும் நிலையில், பொதுப்பணித் துறை சார்பில் அதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ரூ. 1.83 கோடி நிதி
இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை நினைவுப்படுத்தும் விதமாக சென்னை காமராஜர் சாலையில் ரூ. 1.83 கோடியில் நினைவு தூண் கட்டப்படுகிறது.
நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதல்முறையாக சுதந்திர தின நினைவு தூண் அமைக்க அதுதொடர்பான கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித் துறை சார்பில் அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
டெண்டர் கோருபவர்கள் இணையதளம் வாயிலாக கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் நினைவு தின தூணை திறந்து வைப்பார் என தெரிகிறது.
இதையும் படிங்க: 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு'