ETV Bharat / city

நம்ப முடியாத வாக்குறுதி! - அதிமுக மீது வழக்கறிஞர்கள் புகார்! - நத்தம் விஸ்வநாதன்

சென்னை: தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக மீது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இன்று அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

admk
admk
author img

By

Published : Mar 16, 2021, 9:51 PM IST

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் அதிமுக மீது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், திமுக மற்றும் காந்திய வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று, அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெற முயற்சிப்பதாக, காந்திய வழக்கறிஞர்கள் அமைப்பின் சூரியபிரகாசம் என்பவர், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”ஒரு கோடி பேருக்கு வேலை என்பது, உலகத்தில் எந்த அரசாங்கத்தாலும் முடியாத ஒன்று. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் வெறுமனே மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற மட்டுமே அறிவிக்கப்பட்ட இது மலிவான மற்றும் ஏமாற்றும் திட்டம்.

நம்ப முடியாத நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்தால், கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்.

நம்ப முடியாத வாக்குறுதி! - அதிமுக மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்!

அதேபோல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், வழக்கறிஞர் பச்சையப்பனும், சத்யபிரதா சாகுவை சந்தித்து, புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக சார்பில் நத்தம் தொகுதியில் போட்டியிடும் நத்தம் விஸ்வநாதன், வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்து வருவதாகவும், அதன் வீடியோவும் வெளிவந்துள்ளதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: மதுரை விற்பனையாளர்களுக்கு திருவிழாவாகுமா இந்தத் தேர்தல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.