சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கத்தால் உலகம் முழுவதும் விமான சேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மாா்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பயணிகள் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
பின்னர், 2020 மே மாதத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக இயங்கத் தொடங்கின.
விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2020 டிசம்பரிலிருந்து உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின.
ஆனால், கரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் 2021 மாா்ச் முதல் அதிகரித்ததால், ஏப்ரல், மே மாதங்களில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் பெருமளவு குறையத் தொடங்கின.
இந்நிலையில், மே இறுதியிலிருந்து கரோனா தொற்று இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் குறையத் தொடங்கின.
ஜுன் மாதத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய ஐந்து விமான நிலையங்களிலும், பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி சரக்குப் போக்குவரத்தும் அதிகரிக்கத் தொடங்கின.
- ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை சுமாா் இரு மடங்காக அதிகரித்துள்ளன.
அதேபோல் சரக்குப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன.
- சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் விமானங்களிலும், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சிறப்பு சா்வதேச விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்,
- ஜுன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 லட்சத்து,46 ஆயிரத்து,995 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 4 லட்சத்து,46 ஆயிரத்து,697 ஆக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில்,
- ஜுன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 28 ஆயிரத்து,503 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 63 ஆயிரத்து,244 ஆக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில்,
- ஜுன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 26 ஆயிரத்து,110 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 43 ஆயிரத்து,742 ஆக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில்,
- ஜுன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்து,985 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 9 ஆயிரத்து,020 ஆக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில்,
- ஜுன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து,324 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 10 ஆயிரத்து,010 ஆக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களில்,
- ஜுன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து,12 ஆயிரத்து,917 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 5 லட்சத்து,72 ஆயிரத்து,713 ஆக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்குச் செல்லும் சிறப்பு விமானங்களில் பயணிப்போா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில்,
- ஜுன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து,328 என இருந்தது.
- ஜுலை மாதத்ததில் 53 ஆயிரத்து,291 ஆக உயர்ந்தது.
கோயம்புத்தூரில்,
- ஜுன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 539 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை ஆயிரத்து,213 ஆக உயர்ந்தது.
திருச்சியில்,
- ஜுன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து,621 என இருந்தது.
- ஜுலை மாதத்தில் 15 ஆயிரத்து 96 ஆக உயர்ந்தது.
அதேப்போல் தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களில் உள்நாடு, சா்வதேச முணையங்களில் சரக்குப் போக்குவரத்தும், ஜுன் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும், சரக்கு போக்குவரத்தும் கடந்த ஜுன் மாதத்தைவிட ஜுலையில் பெருமளவு அதிகரித்துள்ளன.
'இது ஒரு நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறி' என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் கூறினா். 'கரோனாவால் முடங்கிக்கிடந்த தமிழ்நாடு விமான நிலையங்கள், அதிலிருந்து விடுபட்டு வளா்ச்சியை நோக்கிச் செல்கிறது.
இதனால், தமிழ்நாட்டின் பொருளாதாரமும் மேலோங்கும்' என்று சமூக ஆா்வலா்கள் கூறினா்.
இதையும் படிங்க: 'மாநகராட்சி ஆகிறது தாம்பரம்'