ETV Bharat / city

சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யக் கோரி விஜயபாஸ்கர் மனு - பரிசீலிப்போம் என்கிறது வருமான வரித்துறை!

சென்னை: வருமான வரி வழக்கில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யக் கோரிய அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

vijayabaskar
vijayabaskar
author img

By

Published : Dec 19, 2019, 3:50 PM IST

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017 ஏப்ரலில் நடந்த வருமான வரிச் சோதனையின் அடிப்படையில், 2011-2012ஆம் நிதி ஆண்டிலிருந்து 2018-2019ஆம் ஆண்டு வரை அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறு மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரத்தில், 12 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அவர்களில் 5 பேரை மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசலு, மாதவ ராவ் உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரியும், தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்கவும் வருமான வரித்துறையிடம் விஜயபாஸ்கர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், சேகர் ரெட்டி நிறுவனத்தில் தனக்கு 20 விழுக்காடு பங்கு உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சேகர் ரெட்டி உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜயபாஸ்கர்,  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்

இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை முடிவெடுக்காமல் இருப்பதால், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரிய விஜயபாஸ்கரின் மனுவை சட்டப்படி பரிசீலிப்போம் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

வருமான வரித்துறையின் இந்த விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது

Intro:Body:வருமான வரி வழக்கில் 7 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த மனுவை சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 2017 ஏப்ரலில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில், 2011-12ம் நிதி ஆண்டிலிருந்து 2018-19ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறு மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த நடைமுறையில் 12 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அவர்களில் 5 பேரை மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ ராவ் உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரியும், தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க வருமான வரித்துறையிடம் விஜயபாஸ்கர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், சேகர் ரெட்டி நிறுவனத்தில் தனக்கு 20 சதவீத பங்கு உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சேகர் ரெட்டி உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை முடிவெடுக்காமல் இருப்பதால், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரிய விஜயபாஸ்கரின் மனுவை சட்டப்படி பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறையின் இந்த விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை தள்ளிவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.