ETV Bharat / city

ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம் - சசிகலா தொடர்புடைய நிறுவனத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது! - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

சசிகலாவிற்குச்சொந்தமான ரூ.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கிய நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது நிறுவனத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
author img

By

Published : Jul 2, 2022, 1:34 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அவரது குடும்பத்தினர் பெயரில் அதிகளவில் சொத்துக்கள் குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் வழக்குபதிவு செய்து சசிகலாவிற்கு சொந்தமான சொத்துகளை முடக்கி வருகிறது.

அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு சசிகலாவிற்கு தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புடைய சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரூ.300 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது. அதன் பிறகு சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்தாண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம் செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில் இன்று (ஜூலை2) சென்னை-தியாகராய நகர், பத்மநாபா தெருவில் ரூ.15 கோடி மதிப்பில், 3,486 சதுர அடி நிலத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருப்பதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதனடிப்படையில் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கி, அதற்கான நோட்டீஸை அந்த நிறுவனத்தின் வாசலில் ஒட்டினர். அந்த நோட்டீஸில் சொத்து முடக்கம் செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் (அ) அடுத்த உத்தரவு வரும் வரை இந்த சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு பெயர் மாற்றம் செய்யவோ தடை விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆமை வேக அரசை எதிர்த்து போராடியவரை கைது செய்வதா' - ஈபிஎஸ் ஆவேசம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.