இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சென்னை ஏ.ஜி.எஸ் நிறுவனம் கல்பாத்தி அகோரம் வீட்டில், அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் சோதனை நடத்தினர். இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்ததையடுத்து, நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை அலுவலர்கள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் நான்கு பேர் சோதனை நடத்தியுள்ளனர். 'பிகில்' படத்தில் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: