ETV Bharat / city

செயல்படாத தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் - பொதுமக்கள் அவதி - ரயில்வே

சென்னை: கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதாகி இருப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.

railway
railway
author img

By

Published : Apr 5, 2021, 10:10 PM IST

பணமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரயில்வே துறை சார்பில், ஐஆர்சிடிசி மூலம் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலமும், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், சென்னை கோட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த இயந்திரங்கள் செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதாக கூறப்படும் இக்காலகட்டத்தில், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை கவுன்டரில் பெறாமல், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பெறுவதன் மூலம், தேவையற்ற கூட்ட நேரிசலைக் குறைக்க முடியும். இதனால் மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல்வேறு ரயில் நிலையங்களிலும் செயல்படாமல் பழுதாகியுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை, ரயில்வே துறை சீர்செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

செயல்படாத தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் - பொதுமக்கள் அவதி

கரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, புறநகர் ரயில் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலி மூலம் எடுக்கும் வசதி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டாலும், திருவள்ளூர், ராயபுரம் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யூடிஎஸ் மூலம் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணத்தைத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக காலை 6.30 முதல் 9.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும் இந்த செயலியைப் பயன்படுத்த முடியும். நடைமேடை டிக்கெட் மற்றும் மாதாந்திர டிக்கெட் ஆகியவற்றை இச்செயலி மூலம் எடுக்க முடியாது. எனவே, இக்கட்டான காலத்தை கருத்தில் கொண்டு இவற்றையும் செயலி மூலம் எடுக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

யூடிஎஸ் செயலியின் வசதியை நீட்டிக்கச் செய்ய வேண்டும்!

இதனிடையே, ஊரடங்குக்கு பிறகு மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார், தமிழ்நாடு ரயில் பணிகள் சங்க இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.எஸ். மாரிமுத்து. ஏற்கெனவே கரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது அவர்களுக்கு மேலும் சுமையையே அதிகரிக்கும் என அவர் புகார் தெரிவித்தார்.

கரோனா விழிப்புணர்வுக்காக பல கோடியில் செலவுகளை செய்யும் அரசு, இந்த மாதிரியான சிறு விஷயங்களின் கவனக்குறைவாக இருப்பதே கொள்ளை நோய்கள் தாக்கம் தீவிரமடைய காரணமாகிறது. எனவே, பயணிகளின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவோம்.

இதையும் படிங்க: ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனங்களுக்கு செக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.