ETV Bharat / city

வேளச்சேரியில் மதுவிற்பனை அமோகம்; கண்டுகொள்ளுமா காவல்துறை!

இரவு ஊரடங்கிலும் வேளச்சேரியில் நடக்க்கும் டாஸ்மாக் மதுவிற்பனையை தடுக்கத் தவறிய காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளன.

மதுவிற்பனை
மதுவிற்பனை
author img

By

Published : Jan 21, 2022, 6:16 PM IST

சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில் ஹை5 மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் பாரில் இரவு நேர ஊரடங்கின் போதும் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க இரவுநேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனைக் காற்றில் பறக்கவிடும் விதமாக வேளச்சேரியில் உள்ள குளிர்சாதா மதுபான விடுதி ஒன்றில் மதுவிற்பனை கன ஜோராக நடைபெற்றுவருவதாக தெரிகிறது.

இங்கு டாஸ்மாக் பார்கள் 24 மணி நேரமும் செயல்படுவதால் இரவு நேரத்தில் வேளச்சேரியில் வெளியில் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனால், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவேண்டிய காவல்துறை, குற்றம் நடைபெற்ற பின் அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்; அதே வேளையில் குற்ற சம்பவங்களினைத் தொடக்கத்திலேயேக் கண்டறிந்து அவற்றை அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுப்பதும் முக்கியமானதாகும். அதுவே சமூகத்தை குற்றங்களற்ற ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.

இரவுநேர ஊரடங்கிலும் மதுவிற்பனை.. காவல்துறை கண்டுகொள்ளுமா?.

இந்த நிலையில், காவல்துறையில் இருக்கும் சிலர், அவர்களது குடும்பத்தினருடன் தனியார் உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டிற்கு உரியத் தொகையை முறைப்படி செலுத்தாமல் வருவதாகக் கூறப்படுகின்றன. மேலும், காவல்துறையில் இருக்கும் உயர் அலுவலர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு சம்பந்தபட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் நவீன பாதுகாப்பு சாதனங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.