ETV Bharat / city

தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண் - தமிழ்நாட்டு பெண்ணை மணந்த வங்கதேசத்து பெண்

தமிழ்நாட்டை சேர்ந்த சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும் வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 5, 2022, 6:39 AM IST

Updated : Sep 6, 2022, 6:29 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பெண்ணாகப் பிறந்து பின், வளர்சிதைப் பருவ மாற்றத்தால் ஆணாக மாறிய சுபிக்‌ஷா என்பவரும் வங்க தேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்பவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

கனடாவில் உதித்த காதல்: தமிழ்நாட்டை சேர்ந்த சுபிக்‌ஷா சுப்பிரமணி (29) பிறப்பால் பெண்ணாக இருந்தார். தனது 19 ஆவது வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால், ஆண் என்பதை உணரத் தொடங்கினார். தற்போது கனடாவில் உள்ள கால்கரி நகரில் பட்டய கணக்குத் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

குடும்பத்தாருடன் டினா, சுபிக்‌ஷா திருமண தம்பதியினர்

அதேபோல வங்க தேச இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் டினா தாஸ்(39). இவர் 4 ஆண்டுகளாக தனது கணவருடன் வாழ்ந்துவிட்ட பின், தான் ஒரு லெஸ்பியன் என்பதை உணர்ந்தார். ஆகவே கணவரை விட்டு விலகினார். இவரும் கால்கரியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளைப் பராமரிப்பவராக பணியாற்றி வருகிறார். இந்த இருவருக்கும் மொபைல் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறி செப்.3 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணம்

மதுரையில் பிறந்து வளர்ந்த சுபிக்‌ஷா சுப்பிரமணி, கத்தார் நாட்டில் சில காலமும் இருந்தார். அதன் பின் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். தனது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தனது தாயிடம் சுபிக்‌ஷா எடுத்துக் கூறினார். அவர் போக போக சரியாகிவிடும் என்று ஆறுதல் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் சுபிக்ஷாவும் டினாவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வீட்டில் தெரிவித்தனர். இந்த முடிவுக்கு ஆரம்பத்தில் மறுத்த பெற்றோர் சில மாதங்களுக்கு பின் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி திருமணம் நடந்து முடிந்தது.

இதுகுறித்து சுபிக்‌ஷா கூறுகையில், "நான் மதுரையில் பிறந்தேன். கத்தார்நாட்டில் வளர்ந்தேன். 19 வயதில் எனக்குள் ஆண் தன்மையை உணந்தேன். அதன் பின் கனடாவுக்கு குடிபெயர்ந்தேன். என் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை என் பெற்றோரால் ஆரம்பத்தில் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த பின் புரிந்து கொண்டனர்" என்றார்.

மகளின் மகிழ்ச்சியே முக்கியம்: சுபிக்ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா கூறுகையில், "சுபிக்ஷாவின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவில் உள்ள எங்களின் உறவுகள் இதுபற்றி எப்படி புரிந்துகொள்வார்களோ என்று நினைத்து அச்சப்பட்டேன். இந்தச் சமூகத்தில் சுபிக்‌ஷா எவ்வாறு வாழப்போகிறாள். திருமணம் என்னவாகும் என்ற அச்சமும் இருந்தது. அதே சமயம் மகளின் மகிழ்ச்சியே முக்கியம் என்று எண்ணினேன். இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன் " என்றார்.

அதேபோல வங்க தேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் கூறுகையில் "நான் வங்க தேசத்தின் மவுலிபஜாரில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதிலிருந்து பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அறிந்து எனக்கு அறிவுரை வழங்கினர். டினா தாஸ். எனக்கு 19 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ஆனால், அவருடன் வாழப் பிடிக்காமல் 4 ஆண்டுகளில் பிரிந்தேன். இதனால் என் சகோதரி என்னை ஒதுக்கிவிட்டார். குடும்பத்தினரும் என்னுடன் தொடர்பை துண்டித்து விட்டனர். அதன்பின் கனடாவில் சுபிக்‌ஷாவைச் சந்தித்தேன். இருவருக்கும் மனது ஒத்துப்போனதால் திருமணம் செய்தோம்" என்றார்.

கனடாவில் தங்கள் திருமணத்தை பதிவு செய்த இந்த தம்பதி, இப்போது கால்கரிக்கு திரும்புவதற்கு முன் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணிக்க உள்ளனர். சென்னையில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: எல்ஜிபிடி சமூகத்தைத் துன்புறுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை- நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Sep 6, 2022, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.